'தெஹல்கா' முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் தாயார் சகுந்தலா தேஜ்பால் காலமானார். அவருக்கு வயது 87. டியூமர் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை இறந்தார்.
சக பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தருண் தேஜ்பால் கடந்த நவம்பர் 30-ம் தேதி முதல் கோவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக தேஜ்பால் அவரது தாயாரை நேரில் சந்திக்க இரண்டு முறை கோவா நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், தருண் தேஜ்பால் தாயார் இறுதிச் சடங்கை டெல்லியில் நடத்துவதா இல்லை கோவாவில் நடத்துவதா என குடும்பத்தினர் ஆலோசித்து வருவதாக தேஜ்பால் வழக்கறிஞர் சந்தீப் கபூர் தெரிவித்துள்ளார்.