இந்தியா

தேஜஸ்விக்கு ஏமாற்றம் அளித்த இளம் வாக்காளர்கள்

செய்திப்பிரிவு

பிஹாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கியப் போட்டியாளராக இருந்தது மெகாகூட்டணி. இதன் முதல் அமைச்சர் வேட்பாளரான லாலுவின் மகன் தேஜஸ்வி (31) பிஹாரின் இளம்வாக்காளர்களை பெரிதும் நம்பியிருந்ததாகக் கருதப்படுகிறது.

ஏனெனில், பிஹாரின் சுமார் மூன்றரை கோடி வாக்காளர்கள் 18 முதல் 38 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் எண்ணிக்கை மொத்த வாக்காளர்களில் 50% ஆகும்.

ஏற்கெனவே வேலை இல்லாத காரணத்தால் இவர்கள் வேறுமாநிலங்களுக்கு இடம்பெயரும் நிலை உள்ளது. கரோனா பரவலும் அவர்களது வேலைவாய்ப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அவர்களை திருப்திபடுத்தும் வகையில்தாம் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம்பேருக்கு அரசு வேலைவாய்ப்பு அளிப்பதாக தேஜஸ்வி உறுதிஅளித்தார். இதற்கு முதல்வர் நிதிஷ், அதற்கான நிதி எங்கிருந்து வரும்? எனக் கேள்விஎழுப்பினார். இதன் மறுநாளே நிதிஷின் கூட்டணிக் கட்சியானபாஜக, அரசு, தனியார் என அனைத்திலும் சேர்த்து 19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்தது.

ஒரே கூட்டணியின் இருவேறு கட்சிகளின் இந்த நிலைப்பாட்டால் குழப்பம் நிலவியது. இதை சாதகமாக்கிய தேஜஸ்வி, தனது பிரச்சாரங்களில் நிதிஷ்குமாரை கடுமையாக விமர்சித்தார். இதில் தேஜஸ்விக்கு வெற்றிக்கான நம்பிக்கையும் அதிகரித்தது. இதில், தேஜஸ்வி பெற்றோரின் 15 வருட கால ஆட்சியின்சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைநிதிஷ் இந்த முறையும் நினைவுகூர்ந்திருந்தார்.

இதை எதிர்பார்த்த தேஜஸ்விதனது பிரச்சார சுவரொட்டி,பதாகைகளில் தந்தை லாலுமற்றும் தாய் ராப்ரி தேவியின்படங்களை பயன்படுத்தவில்லை.

151 பிரச்சாரக் கூட்டங்களில்தேஜஸ்வி பங்கெடுத்தார். இவரது கூட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இளைஞர்களும் பெருமளவில் கூடி இருந்தனர். எனினும், இவர்கள் வாக்குகள் பெருமளவில் தேஜஸ்விக்கு கிடைக்காமல் போனது. இதன்மூலம் தேஜஸ்விக்கு பெருத்தஏமாற்றம் கிடைத்திருப்பதாகக் கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT