அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் பதவி வகிப்பார் என்று அம்மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறினார்.
இது தொடர்பாக அவர் நேற்றுஅளித்த பேட்டி:
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏழை மக்கள் பிரதமர் மோடிக்கு வாக்களித்துள்ளர். இது பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) கிடைத்த வெற்றி. முதல்வர் நிதிஷ் குமாருக்கு கிடைத்த வெற்றியும் ஆகும். அவரது 15 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் அதிகம் பலன் அடைந்துள்ளனர். ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்கு, இலவசசமையல் காஸ் இணைப்பு, கழிப்பறைகள் போன்ற பிரதமரின் பல்வேறு திட்டங்கள் பிஹாரில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் பிரச்சாரத்தின்போது ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்தேஜஸ்வி யாதவுக்கு கூடிய கூட்டங்களைப் பார்த்து அச்சம்அடைந்தீர்களா என கேட்கிறீர்கள். அவ்வாறு எதுவும் இல்லை.எங்கள் கட்சி கூட்டங்களுக்கும் மக்கள் அதிகம் கூடினர். எங்களது நட்சத்திர பிரச்சாரகர்களில் முதன்மையானவர் மோடி. மக்களுக்கான அவரது திட்டங்கள் பாஜகவுக்கான ஆதரவாக மாறியது.
கூட்டணிக் கட்சியான ஐக்கியஜனதா தளத்தைவிட அதிக இடங்களைப் பெற வேண்டும் என்பதில்பாஜக தொடக்கத்தில் இருந்தே குறியாக இருந்தது என கூறுவதில் உண்மை இல்லை. நிதிஷ்குமார்தான் முதல்வர் வேட்பாளர்என எங்கள் கட்சித் தலைமை ஏற்கெனவே அறிவித்து விட்டது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிதிஷ்குமார் பிஹார் முதல்வாரக இருப்பார். முதல்வர் வேட்பாளர் நிதிஷ்குமார் என்று கூறிதான் தேர்தலில்போட்டியிட்டோம். எனவே முதல்வர் பதவி விவகாரம் ஏற்கெனவேமுடிந்துபோன ஒன்றாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.