தேசிய கொடி அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி படேல் சமுதாய தலைவர் ஹர்திக் படேல் குஜராத் உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
குஜராத்தில் படேல் சமுதாய போராட்டத்தின்போது ஹர்திக் படேலை போலீஸார் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர் காரின் கூரை மீது ஏறி அமர்ந்ததாகவும் அவரது கால் காரில் பறந்த தேசிய கொடி மீது பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஹர்திக் படேல் மீது பதாரி நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் தேசிய கொடி அவமதிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் நேற்று அவர் மனு தாக்கல் செய்தார். ஹர்திக் படேலின் தந்தை பாரத் படேல் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். இது இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.