இந்தியா

நிலக்கரித் துறை செயலர் அறிவுரைப்படி செயல்பட்டேன்: சிபிஐ-யிடம் மன்மோகன் சிங் வாக்குமூலம்

பிடிஐ

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு வழங்கிய விவகாரத்தில் அத்துறை செயலரின் அறிவுரைப் படியே செயல்பட்டேன் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிபிஐ-யிடம் தெரிவித்துள்ளார்.

ஒடிஸா மாநிலத்தில் தலபிரா-2 சுரங்கத்தை நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) கோரியது. மத்திய மின்துறை என்எல்சியை பரிந்துரை செய்தது. ஒடிஸா முதல் வர் நவீன் பட்நாயக் ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஹிண்டல் காவுக்கு சுரங்கத்தை ஒதுக்க பரிந் துரை செய்ததார். இதில் கடந்த 2005-ம் ஆண்டில் ஹிண்டல்கா வுக்கு சுரங்கம் ஒதுக்கப்பட்டது.

இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த 2005-ம் ஆண்டில் அப் போதைய பிரதமர் மன்மோகன் சிங் நிலக்கரித் துறையையும் கூடுதலாக கவனித்து வந்ததால் அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ-யிடம் மன்மோகன் சிங் கூறியிருப்ப தாவது:

ஹிண்டல்காவுக்கு தலபிரா-2 சுரங்கத்தை ஒதுக்குமாறு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் கடிதம் அனுப்பியிருந்தார். அதனை நிலக்கரித் துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பினேன்.

அன்றைய நிலக்கரித் துறை செயலரும் ஹிண்டல்காவுக்கு சுரங்கத்தை ஒதுக்க பரிந்துரை செய் தார். இதனை பிரதமர் அலுவலக அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். அதன்படியே தலபிரா-2 சுரங்கம் ஹிண்டல்காவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் நிலக்கரித் துறைச் செயலரின் ஆலோச னைப்படியே செயல்பட்டேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலபிரா நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கப்பட்டபோது அத்துறைச் செயலாளராக பி.சி.பரேக் இருந்தார். நிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் அவரும் பிரதமர் மன்மோகன் சிங்கும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

SCROLL FOR NEXT