மத்தியப் பிரதேச மாநிலத்தில் 28 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவடைந்து வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளன.
நவம்பர் 3ம் தேதி 19 ம்வாவட்டங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ரது. ஆளும் பாஜக 28 தொகுதிகளில் குறைந்தத் 8 தொகுதிகளையாவது வென்றால்தான் ம.பி.யில் பாஜக ஆட்சி நீடிக்கும் நிலை உள்ளது.
மேலும் இதில் காங்கிரஸிலிருந்து தாவிய ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் செல்வாக்கும் என்னவென்று தெரிந்து விடும் என்று இந்த முடிவுகள் ஆவலை தூண்டியுள்ளன
ம.பி. யில் மொத்தம் 230 சட்டமன்றத் தொகுதிகள், இதில் அருதிப்பெரும்பான்மை பெற வேண்டிய நிலையில் ஆளும் பாஜக உள்ளது.
பாஜகவுக்கு தற்போது 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், காங்கிரஸ் கட்சிக்கு 87 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
மேலும் இந்த தேர்தல் முடிவுகள் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவினால் ஆட்சியை இழந்த காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கமல்நாத்திற்கும் முக்கியமானதாகும்.
தேர்தல் ஆணைய கரோனா கால வழிகாட்டுதல்களின் படி வேட்பாளர், வாக்குச்சாவடி ஏஜெண்ட் மற்றும் கவுண்டிங் ஏஜெண்ட் ஆகியோர் மட்டுமே வாக்கு எண்ணும் இடத்தில் அனுமதிக்கப்படுவார்கள்
கரோனா பரவலிலும் ம.பியி. 70.27% வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் 355 வேட்பாளர்கள் 12 அமைச்சர்கள் போட்டியிட்டனர்