டெல்லியில் வரும் 30-ம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை வெங்கடேஸ்வரா வைபவ உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்ற உள்ளது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் பங்கேற்கின்றனர்.
திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி நேற்று கூறியதாவது:
உலகம் முழுவதும் ஏழுமலையானின் புகழை பரப்ப வேண்டும் என்கிற குறிக்கோளோடு, இதுவரை விசாகப்பட்டினம், குண்டூர், நெல்லூர் ஆகிய இடங்களில் வெங்கடேஸ்வரா வைபவ உற்சவம் நடைபெற்றது. 10 நாட்கள் வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஏழுமலையானுக்கு திருப்பதியில் நடைபெறும் அனைத்து சேவைகளும் அங்குள்ள பக்தர்களின் முன்னிலையில் நடத்தப்படும்.
இதற்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் வரும் 30-ம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நவம்பர் 7-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி கூறினார்.