இந்தியா

‘‘இயற்கை அழகோடும் விளங்கும் உத்தரகண்ட்’’- பிரதமர் மோடி வாழ்த்து

செய்திப்பிரிவு

உத்தரகண்ட் மாநிலம் உதய தினம் கொண்டாட்டபட்டு வரும் நிலையில் அம்மாநில தினத்தை முன்னிட்டு உத்தரகாண்ட் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு உத்தரகண்ட் தனி மாநிலமாக உதயமான தினம் இன்று. இதையொட்டி தலைநகர் டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

மாநில தினத்தை முன்னிட்டு, உத்தரகண்ட் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"மாநில தினத்தை முன்னிட்டு உத்தரகண்ட் மக்களுக்கு வாழ்த்துகள். இயற்கை வனப்போடும், இயற்கை அழகோடும் விளங்கும் உத்தரகண்ட், வளர்ச்சியின் பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. வளர்ச்சியில் புதிய உயரங்களை எட்ட வாழ்த்துகள்," என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT