உ.பி. அரசுப் பணியாளர் தேர் வாணைய தலைவராக அனில் குமார் யாதவ் கடந்த 2013, ஏப்ரல் முதல் பதவி வகிக்கிறார். இப்பத விக்கு மாநில அரசிடம் பயோ- டேட்டா அளித்த 83 விண்ணப்பதாரர் களில் இருந்து அனில் குமார் தேர்வு செய்யப்பட்டார்.
அவரது நியமனத்துக்கு எதிராக வழக்கறிஞர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
“அனில்குமார் மீது அவரது சொந்த மாவட்டமான ஆக்ராவில் கொலை முயற்சி வழக்கு உள்ளது. குண்டர்கள் தடைச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைகளை மறைத்து அவருக்கு பதவி வழங்கப்பட்டுள் ளது. மெயின்புரி மாவட்டம், சித்ர துர்கா நகரில் கல்லூரி முதல்வராக பதவி வகித்தாக அனில்குமார் தனது விண்ணப்பத்தில் கூறியிருப் பது தவறு” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூடன், யஷ்வந்த் வர்மா ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.
“இந்த நியமனம் தன்னிச்சை யானது. சட்டவிரோதமானது. அரசியல் சட்டவிதி 316-க்கு எதி ரானது. தகுதிவாய்ந்த விண்ணப்ப தாரர்கள் கவனத்தில் கொள்ளப் படவில்லை. அனில்குமாரின் தகுதியை முழுவதும் ஆராயாமல் அரசு கடமை தவறியுள்ளது” என்று தெரிவித்த நீதிபதிகள் அனில் குமார் நியமனத்தை ரத்து செய்தனர்.
அனில்குமார் மீதான வழக்கு களில் இருந்து அவர் விடுவிக்கப் பட்டதாக அவரது தரப்பில் நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. என்றாலும் அனில் குமார் பல ஆண்டுகளுக்கு முன் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டபோது, அவரது நியமனம் பின்னர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை அவர் மறைத்துவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.