இந்தியா

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளால் தேசிய, மாநில அரசியலில் மாற்றம் வருமா?

ஆர்.ஷபிமுன்னா

பிஹார் தேர்தல் முடிவுகளால் தேசிய மற்றும் மாநிலங்களின் அரசியலில் மாற்றம் உருவாகுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. இதன்மூலம், மாநிலக் கட்சிகளுக்கு பொதுமக்கள் அளிக்கும் முக்கியத் துவமும் தெளிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மற்றும் மெகா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தேசிய, மாநில தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். என்டிஏவின் பிரச்சாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியும், பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவருமான நிதிஷ் குமாரும் முக்கிய இடம் பெற்றுள்ளனர். மெகா கூட்டணியில் காங்கிரஸில் ராகுல் காந்தியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியில் லாலுவின் மகனான தேஜஸ்வி பிரசாத் யாதவும் உள்ளனர்.

இவர்களில், என்டிஏவிற்கு கிடைக்கும் வெற்றி, கடந்த 2014-ல் அடிக்கத் துவங்கிய மோடி அலை தொடர்வதாகக் கருதப்படும். மெகா கூட்டணி வெற்றி பெற்றால் அது மாநிலம் மற்றும் காங்கிரஸுக்கு சாதகமான சூழல் உருவாகும். இதன் தாக்கம் அடுத்து வரும் மற்ற மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், முதல்முறையாக 2 மூன்றாவது கூட்டணிகள் அமைந் துள்ளன.

இதன் ஒன்றில் முன்னாள் மத்திய அமைச்சரான உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா தலைமையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஜனநாயக சமாஜ்வாதி ஜனதா தளம் மற்றும் ஹைதராபாத் எம்.பி.யான அசாசுதுதீன் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட 6 கட்சிகள் இணைந்துள்ளன.

மற்றொரு கூட்டணியில், பப்புயாதவின் ஜன் அதிகார் தலைமையில் உத்தரபிரதேசத்தின் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ராவணின் ஆசாத் சமாஜ் உள்ளிட்டசில கட்சிகள் உள்ளன. இவ்விரண்டுகூட்டணிகளுக்கும் கிடைக்கும் வாக்குகளைப் பொறுத்து, பொதுமக்களிடம் 3-வது அணிகளுக்கு கிடைக்கும் ஆதரவும் தெரியும் வாய்ப்புகள் உள்ளன.

கடந்த 20 வருடங்களாக பிஹார் அரசியலில் முக்கிய இடம் வகித்த ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி (எல்ஜேபி) தனித்து போட்டியிடுகிறது. இதன் நிறுவனரான ராம் விலாஸ் பாஸ்வான் இறந்ததால் அவரது மகனான சிராக் பாஸ்வான் அக்கட்சிக்கு தலைமை ஏற்றுள்ளார். எனவே, இவரது கட்சிக்கும் பிஹாரில் உள்ள எதிர்காலம் அதன் தேர்தல் முடிவுகளில் தெளிவு பெறும் எனக் கருதப்படுகிறது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக அடித்தமோடி அலையில் என்டிஏவிற்கு பெரும்பாலான மாநிலங்களில் வரவேற்பு கிடைத்தது. இதன் தாக்கமாக 2015-ல் வந்த பிஹார் தேர்தலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த ஜேடியுவின் நிதிஷும், ஆர்ஜேடியின் லாலுவும் கைகோர்த்தனர். இதற்கு ஆட்சி அமைக்ககிடைத்த வாய்ப்பின் காரணமாகஉத்தரபிரதேசத்திலும் எதிரெதிர் துருவங்கள் ஒன்றிணைந்தன. முலாயம் சிங்கின் சமாஜ்வாதியுடன் காங்கிரஸ் இணைந்தது.பிறகு சமாஜ்வாதியுடன் பகுஜன்சமாஜின் மாயாவதி இணைந்தார்.ஆனால், 2 கூட்டணிகளுக்கும் எந்தப் பலனும் கிடைக்காததுநினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT