இந்தியா

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஜபக்சே, நவாஸ் ஷெரீப் டெல்லி வந்தடைந்தனர்

செய்திப்பிரிவு

இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று இந்தியா வந்தடைந்தார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது மனைவி குல்சூம் நவாஸ் மற்றும் அவரது மகன் ஹுசேன் நவாஸுடன் வந்தடைந்தார்.

பூட்டான் பிரதமர் லியான்சென் ட்ஷெரிங், வங்கதேசம் சபாநாயகர் ஷிரின் சவுத்த்ரி ஆஜியோர் நேற்று மாலை புது டெல்லி வந்தனர்.

ஆப்கான் பிரதமர் ஹமீத் கர்சாய், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யீமன் அப்துல் காயும் ஆகியோரின் வருகைக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் முதன்முறையாக இந்திய பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வரவேற்கப்பட்டுள்ளனர்.

நரேந்திர மோடி நாளை சார்க் நாட்டுத் தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT