ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா (சிவப்பு பொன்னாடை அணிந்திருப்பவர்) தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை நேற்று தரிசித்தார். பின்னர் அவருக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி சுவாமியின் திரு உருவப்படத்தை வழங்கி கவுரவித்தார். படம்: பிடிஐ 
இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் தரிசனம்

செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று காலையில் தனது குடும்பத்தாருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

நேற்று முன்தினம் இரவு அவர் தனது குடும்பத்தாருடன் திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின்னர் அவர் திருமலையில் தங்கினார். இதைத் தொடர்ந்து ஆளுநர் சின்ஹா நேற்று காலையில் தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் ரங்கநாயக மண்டபத்தில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கரோனா தொற்று பரவாமல் திருமலையில் மிகச் சிறப்பாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தேவஸ்தான அதிகாரிகளை பாராட்டினார்.

SCROLL FOR NEXT