இந்தியா

பண்டிகையின் போது தீவிரவாத தாக்குதல் அபாயம்: மாநில அரசுகள் உஷாராக இருக்க அறிவுரை

பிடிஐ

பண்டிகை கால பரபரப்பின்போது தீவிரவாதிகளும் பிரிவினைவாத சக்திகளும் நாட்டில் அமைதியை குலைத்து வகுப்பு மோதலை தூண்டிவிட சதி செய்யக்கூடும் என்பதால் அவற்றை முறியடிக்க உஷார் நிலையில் இருக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேர் ஊடுருவி யுள்ளதாக உளவு அமைப்புகள் கூறியுள்ளதை அடுத்து இந்த எச்சரிக்கையை மத்திய அரசு விடுத்துள்ளது என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

பண்டிகைகளுக்காக பொருள் கள் வாங்க மக்கள் கூடும் சந்தை கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டுத்தலங் கள் போன்றவற்றை இலக்கு வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி செய்யக்கூடும். இதற்கு இடம்தராதவாறு கூடுதல் எண்ணிக்கையில் பாதுகாப்புப் படையினரை நிறுத்தி முன்னெச் சரிக்கையுடன் செயல்படும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

நவராத்திரி, துர்கா பூஜை, தசரா, முகரம், போன்ற பண்டிகை கள் வரவுள்ள நிலையில் மாநில அரசுகள் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் விழிப்பாக இருக்க வேண் டும். டெல்லி. மும்பை, கொல் கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற மாநகரங் களின் காவல்துறை தனி கவனத் துடன் செயல்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கோரி யுள்ளது.

கட்டாய நன்கொடை வசூல், வழக்கத்துக்கு மாறான பாதை களில் மத ஊர்வலம் நடத்துவது, சர்ச்சைக்குரிய இடங்களில் சிலை நிறுவி திருவிழா நடத்துவது, மசூதிகள், தர்காக்கள் போன்றவை அருகே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுவது, பெண்களை கேலி செய்வது போன்ற வகையில் பதற்றத்தை ஏற்படுத்திட முயற்சி நடக்கலாம். இதை போலீஸார் முறியடிப்பது அவசியம் என்று உள்துறை அமைச்சகம் கூறி யுள்ளது.

SCROLL FOR NEXT