இந்தியா

அருண் ஜேட்லிக்கு நிதியமைச்சகம்: பாதுகாப்புத் துறை தற்காலிகமானது

செய்திப்பிரிவு

பல்வேறு இக்கட்டான சூழ்நிலை களில் மோடிக்கு ஆதரவாக இருந்த தன் மூலம் அவரது பாதுகாவலர் என்று கூறப்படும் அருண் ஜேட்லி நிதியமைச்சராக செவ்வாய்க் கிழமை பொறுப்பேற்றார். பதவி யேற்பதற்கு சற்று முன்பாக, விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் குடும்பத்துக்கு ஜேட்லி ஆறுதல் கூறினார்.

அப்போது சில வாரங்களுக்கு மட்டுமே பாதுகாப்புத் துறைக்கு நான் பொறுப்பாக இருப்பேன். பாதுகாப்பு அமைச்சகம் மிகவும் முக்கியமான பொறுப்பு என்று ஜேட்லி தெரிவித்தார்.

ராணுவத் தளபதி நியமனம் குறித்த கேள்விக்கு, அதில் எந்த சச்சரவும் இருக்காது. தேர்தல் நேரத்தில் நியமன முறை பற்றி சில கேள்விகள் எழுப்பப்பட்டாலும் சரியான நபரை நியமிப்பதில் சச்சரவு இருக்கக்கூடாது என்றும் ஜேட்லி கூறினார்.

2002-ல் குஜராத் கலவரத்துக்குப் பின் மோடியின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலை நிலவியபோது ஜேட்லி, மோடியை மிக வலுவாக ஆதரித்துப் பேசினார். மோடி பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டபோது அத்வானி போன்றவர்களால் அதிருப்தி குரல் வேகமாக ஒலித்த போது, மோடிக்கு ஆதரவாகவும் முக்கிய பங்காற்றினார். அமிர்த சரஸ் தொகுதியில் ஜேட்லி தோல்வி யடைந்தபோதும், அவரை மத்திய அமைச்சராக்கியது மோடிக்கு அவர்மீது உள்ள வலுவான நம்பிக்கையைக் காட்டுகிறது.

வாஜ்பாயின் முதல் அமைச்சரவையில் தனிப்பொறுப் புடன் கூடிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், பொதுத் துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்க புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்ட போது அதற்கும் தனிப்பொறுப்பை ஏற்றார். கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராகவும் ஜேட்லி பொறுப்பு வகித்துள்ளார்.

SCROLL FOR NEXT