இந்தியா

உயர் வகுப்பினருக்கு 20% இடஒதுக்கீடு: காங். வலியுறுத்தல்

பிடிஐ

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள உயர் வகுப்பினருக்கு 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

குஜராத்தில் உயர் வகுப்பினரான படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழ் நிலை நிலவுகிறது.இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் காமத், அகமதா பாதில் நேற்று கூறியதாவது:

இடஒதுக்கீடு சதவீதம் 49 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டிருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த விவகாரத் தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அவர்களுக்கு 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை இடஒதுக்கீடு வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். இல்லை யெனில் உச்ச நீதிமன்றத்தில் உரிய விளக்கம் அளித்து ஒப்புதல் பெற வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT