இந்தியா

‘சட்ட விரோத கைது, நான் அதிர்ச்சியடைந்துள்ளேன்’ - உயர் நீதிமன்றத்தை நாடிய ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி  

பிடிஐ

மும்பை போலீஸார் தன்னைக் கைது செய்தது சட்ட விரோதம் என்று கோரி ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

2018ம் ஆண்டு கட்டிட உள் அலங்கார வடிவமைப்பாளர் தற்கொலையைத் தூண்டியதாக அர்னாப் கைது செய்யப்பட்டார், இந்நிலையில் அந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அர்னாப் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இன்று மதியம் இந்த மனுவை டிவிஷன் அமர்வு நீதிபதிகள் ஷிண்டே மற்ரும் கார்னிக் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வருகிறது இந்த மனு.

மும்பையில் லோயர் பரேலில் கோஸ்வாமி நேற்று அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். ரைகாட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் காவல்நிலையத்தின் லாக்-அப்புக்குள் அர்னாப் தள்ளப்பட்டார்.

பிற்பாடு அலிபாகில் உள்ள மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட அவரை நவம்பர் 18ம் தேதி வரை நீதிமன்ற விசாரணைக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

கோஸ்வாமி இப்போதைக்கு அலிபாக் சிறைக்கைதிகளுக்கான கோவிட் 10 மையத்தில் அர்னாப் அடைக்கப்பட்டுள்ளார்.

தன் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யவும், தன்னை உடனடியாக விடுதலை செய்யவும் அவர் தன் மனுவில் கோரியுள்ளார்.

அவர் மேற்கொண்ட மனுவில், தன்னை தவறாகவும் சட்ட விரோதமாகவும் கைது செய்திருப்பதாகவும் ஏற்கெனவே மூடப்பட்ட வழக்கைத் தோண்டி எடுத்து சட்ட விரோதமாகக் கைது செய்துள்ளனர் என்றும் இது அரசியல் சூழ்ச்சி என்றும் பழிவாங்கும் அரசியல் என்றும் கூறிஉள்ளார் அர்னாப்.

மேலும் அடிப்படை உரிமைகளை மீறி தன்னை கைது செய்த விதம் கண்டனத்துக்குரியது இதனால் தன் கவுரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக முதல்வர் பட்னாவிஸ் காலத்தில் வந்த வழக்கை அவரது அரசு அவசரம் அவசரமாக முடித்து வைத்தது, அதை இப்போது அர்னாப் காரணமாகக் காட்டுகிறார்.

மகாராஷ்டிரா அரசை கேள்விகேட்டதற்காக என் மீது வஞ்சம் தீர்க்க முடித்து வைத்த வழக்கை கையில் எடுத்துள்ளனர், இது அதிர்ச்சியளிக்கிறது, அப்போதே விசாரணை நடத்தப்பட்டு முடிக்கப்பட்ட வழக்கு இது. அப்போது தான் தன் வர்த்தக ஆவணங்கள் அனைத்தையும் விசாரணையில் காட்டியுள்ளேன். முழுதும் ஒத்துழைத்தேன்.

மேலும் கோஸ்வாமியின் ஏஆர்ஜி அவுட்லையர் நிறுவனம் தற்கொலை செய்து கொண்ட அன்வய் நாயக் நிறுவனத்துக்கு 90% தொகையை கொடுத்து விட்டதாகவும் மனுவில் அவர் கோரியுள்ளார்.

SCROLL FOR NEXT