இந்தியா

சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் முதன்மை பொறுப்பு: தாத்ரி சம்பவம் குறித்து ராஜ்நாத் சிங் கருத்து

பிடிஐ

“சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் முதன்மை பொறுப்பாகும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

உ.பி.யின் தாத்ரி பகுதியில் பசு இறைச்சி சாப்பிட்டதாக இஸ்லாமியர் ஒருவர் கடந்த 28-ம் தேதி அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சியும் மத்தியில் ஆளும் பாஜகவும் ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தி வரும் வேளையில் ராஜ்நாத் இவ்வாறு கூறியுள்ளார்.

தாத்ரி விவகாரம் தொடர்பாக ராஜ்நாத் சிங் நேற்று லன்னோவில் கூறும்போது, “சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் முதன்மை பொறுப்பாகும். அவர் கள் உதவி கோரினால் நாங்கள் அளிக்க முடியும். இதில் மத்திய அரசு நேரடியாக தலையிட அரசிய லமைப்பு சட்டம் அனுமதிக்க வில்லை. ஜாதி அல்லது மத அடிப் படையிலான அரசியலில் பாஜகவுக்கு நம்பிக்கையில் இல்லை. சமூக பதற்றம் மூலம் அரசியல் லாபம் அடைய சிலர் முயற்சிப்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் பண்புள்ள ஜனநாயகத்தில் இதற்கு இட மில்லை” என்றார்.

பிரதமரின் தொகுதியான வாரணாசியில் சமீபத்திய வன் முறை குறித்து ராஜ்நாத் சிங் கூறும்போது, “இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் என்ற முறை யில் தேவையான நடவடிக்கை எடுக்க பிரதமர் எனக்கு உத்தர விட்டுள்ளார்.

தாத்ரி மற்றும் பிற சம்பவங் களுக்கு பிறகு சமூக நல்லிணக் கத்தை பராமரிக்க உரிய நட வடிக்கை எடுக்குமாறு உ.பி. மற்றும் பிற மாநில அரசுகளை அறிவுறுத்தி யுள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT