இந்தியா

ராஜஸ்தான் பாலைவனத்தில் கரடுமுரடான பாதையில் 200 கி.மீ. ஓட்டம் : ஆயுதப்படை வீரர்கள் சாதனை

செய்திப்பிரிவு

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு 200 கி.மீ நீள ஃபிட் இந்தியா ஓட்டத்தில் பங்கேற்றுள்ள இந்தோ - தீபத் படையினர் ஜெய்சால்மர் பாலைவனப்பகுதி வழியாக சென்றனர்.

இந்த நிகழ்ச்சியை இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை ஒருங்கிணைத்திருந்தது. மூன்று நாட்கள் நடைபெறும் 200 கி.மீ தூர ஓட்டத்தில் இந்தோ-திபெத்திய காவல் படையின் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள், பல்வேறு மத்திய ஆயுதப்படை காவல் படைகளின் வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஓட்டம் இரவுப் பகலாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள தார் பாலைவனத்தின் குன்றுகளையும் வீரர்கள் ஓடி கடந்தனர்.

கிஷன்கார்க் கோட்டை என்ற முக்கியமான இடம் உட்பட பல்வேறு போர் மற்றும் சண்டைகள் நடைபெற்ற சர்வதேச எல்லைகோட்டை ஒட்டிய பாதையில் பெரும்பாலான ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஓட்டம் இன்று நிறைவு பெறுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் நடந்த தொடக்க நிகழ்வில் திரைப்பட நடிகர் வித்யுத் ஜம்வால் பங்கேற்றார். ஓட்டத்தின் தொடக்கத்தில் சில கி.மீ-கள் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் ஓடினார்.

SCROLL FOR NEXT