இந்தியா

சோட்டா ராஜனை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு தீவிரம்: இந்தோனேசியா செல்கிறது அதிகாரிகள் குழு

செய்திப்பிரிவு

இந்தோனேசியாவில் கைது செய் யப்பட்டுள்ள நிழலுலக தாதா சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக் கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் முன்னாள் கூட்டாளி யான சோட்டா ராஜனுக்கு எதிராக 1995-ம் ஆண்டு இன்டெர்போல் ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ பிறப்பித்தது. அப்போது முதல் தலைமறைவாக இருந்து வரும் ராஜன், ஆஸ்திரேலியா அளித்த தகவல் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் கைது செய்யப்பட்டார்.

அவரை இந்தியா கொண்டுவர உளவுத்துறை, சிபிஐ-யின் இன்டெர் போல் பிரிவு, மும்பை காவல்துறை ஆகியவற்றின் உயரதிகாரிகள் குழுவை மத்திய அரசு இந்த வார இறுதியில் இந்தோனேசியா அனுப் பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ராஜனுக்கு உள்ள தொடர்பு குறித்து விரிவான ஆவணங்கள் தயாரிக்கும் பணியில் உளவுத் துறை, சிபிஐ, மும்பை காவல்துறை என பல்வேறு அமைப்புகள் ஈடுபட் டுள்ளன. ராஜன் மீதான 80 வழக்கு கள் தொடர்பான ஆவணங்களை மும்பை போலீஸார் திரட்டி வரு கின்றனர். அவரது குரல் மாதிரியும் பதிவு செய்யப்படுகிறது.

இந்த ஆவணங்களை திரட்டும் பணிகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஒருங்கிணைத்து வரு கிறது. ராஜனை கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்ட ரெட் கார்னர் நோட்டீஸ், இந்தியாவில் அவரது குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்களும் திரட்டப்படுகிறது. இதன் மூலம் அவர் இந்தியாவைச் சேர்ந்தவர், இந்தியாவில் செய்த குற்றங்களுக்காக தேடப்படுபவர் என்பதையும் திட்டவட்டமாக நிரூ பிக்கும் நடவடிக்கையும் மேற் கொள்ளப்படுகிறது.

ராஜனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி கோரும்போது, இந்தோனேசிய பாதுகாப்பு அமைப்புகளிடம் இந்த ஆவணங் கள் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அரசின் மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தியா இந்தோனேசியா இடையே குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைப்பதற்கான ஒப் பந்தம் ஏதும் இதுவரை கையெழுத் தாகவில்லை. இதனால் ராஜனை இந்தியா கொண்டுவருவதற்கு அவருக்கு எதிரான ஆதாரங்களை இந்தியா திரட்டி வருகிறது.

சோட்டா ராஜனிடம் விசாரணை மேற்கொண்ட இந்தோனேசிய சிஐடி அதிகாரி மேஜர் ரிச்சர்டு கூறும் போது, “விசாரணையில் கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் வசித்ததாக ராஜன் கூறினார். தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் அவருக்கு இந்தியா திரும்புவதில் விருப்பமி்ல்லை. அவர் ஜிம்பாப்வே செல்லவே விரும்புகிறார்” என்றார்.

போலீஸ் காவலுக்கு செல்லும் முன் சோட்டா ராஜன் ஒரு தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் தான் யாருக்கும் அஞ்சவில்லை என்றார்.

SCROLL FOR NEXT