இந்தியா

பிஹார் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியாது என யார் சொன்னது?- ப.சிதம்பரம் கேள்வி

செய்திப்பிரிவு

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியாது என யார் சொன்னது, தோற்கடிக்க முடியும் என்பதை எதிர்க்கட்சிகள் நம்ப வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:-'

‘‘2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு 381 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் அல்லது இடைத்தேர்தல் நடந்தது. இவற்றில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்

இந்த 381 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் 319 இடங்களில் வெற்றி பெற்றார்கள்.

ஆனால் பின்னர் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் அல்லது இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் 163 இடங்களில் மட்டுமே வெற்றியடைந்தார்கள்.
ஒரே ஆண்டில் 319 என்பது 163 ஆக குறைந்தது!

பாஜகவைத் தோற்கடிக்க முடியாது என்று யார் சொன்னது? முடியும் என்று எதிர்கட்சிகள் நம்ப வேண்டும். இது பிஹாரில் நடக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT