இந்தியா

கிராமங்களில் குடிநீர் இணைப்பு: மாநில அமைச்சர்களுடன் நவம்பர் 3-ம் தேதி ஜல்சக்தி அமைச்சகம் ஆலோசனை

செய்திப்பிரிவு

மத்திய ஜல் சக்தி இயக்கத்தின் சார்பில் மாநிலங்களின் கிராம ப்புற குடிநீர் விநியோகத்துறை அமைச்சக்களுடன் வரும் நவம்பர் 3ம்தேதி காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடைபெற உள்ளது.

மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் தலைமையில் வரும் 3 ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மாநில கிராமகுடிநீர் விநியோக பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த ஆலோனையின்போது மாநிலங்கள், யூனியன் பிரேதங்களில் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

குறிப்பாக கிராமங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான 100 நாள் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

SCROLL FOR NEXT