மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கெங்வார்: கோப்புப் படம். 
இந்தியா

மத்திய அமைச்சர் சந்தோஷ் கெங்வாரின் மனைவி உள்பட குடும்பத்தினர் 6 பேருக்குக் கரோனா தொற்று

பிடிஐ

மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கெங்வாரின் மனைவி உள்பட குடும்பத்தினர் 6 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48 ஆயிரத்து 648 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தப் பாதிப்பு 81 லட்சத்து 37 ஆயிரத்து 119 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 74 லட்சத்தைக் கடந்துள்ளது.

கரோனாவின் தாக்கத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் என யாரும் தப்பவில்லை. அமித் ஷா, நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். இதேபோல பல மாநிலங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டனர்.

இந்நிலையில் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கெங்வாரின் குடும்பத்தில் அவரின் மனைவி உள்பட 6 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

71 வயதாகும் மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கெங்வார் கரோனா பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்குக் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

கெங்வார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “என்னுடைய குடும்பத்தினர் சமீபத்தில் டெல்லிக்குச் சென்றிருந்தனர். அவர்கள் திரும்பி வந்ததில் இருந்து உடல்நலம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் என் மனைவி உள்பட குடும்பத்தினர் 6 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அனைவரும் பரிதாபாத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

என்னுடைய வீட்டின் சமையல்காரரும் உடல்நலமில்லாமல் இருப்பதால், அவருக்கும் கரோனா பரிசோதனை செய்து, அவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். என்னுடைய அலுவலகத்தில் சிலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT