இந்தியா

சிவசேனா எதிர்ப்பையும் மீறி கசூரி புத்தகம் வெளியிடப்பட்டது

பிடிஐ

சுதீந்திர குல்கர்னி மீது மசியைக் கொட்டி ஆர்பாட்டம் செய்தும், புத்தக அறிமுக நிகழ்ச்சிக்கு அச்சுறுத்தல் விடுத்தும் சிவசேனா செய்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கசூரியின் ‘Neither a Hawk, Nor a Dove’ என்ற புத்தகம் மும்பையில் வெளியிடப்பட்டது.

போராட்டத்தைக் கைவிடுமாறு பல்வேறு தரப்புகளிலிருந்தும் கோரிக்கை வைக்கப்பட்ட பின்பும், போராட்டத்தை தொடருவோம் என்று சிவசேனா கூறியதால் நிகழ்ச்சி நடந்த இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இது பற்றி கசூரி கூறும்போது, “மும்பை விமானநிலையத்தில் நான் வந்திறங்கியது முதல் எனக்கு சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த முதல்வர் ஃபட்னாவிஸுக்கு என் நன்றிகள் என்றார்.

சுதீந்திர குல்கர்னி தனது உரையில் கூறும்போது, “நிகழ்ச்சி நடைபெறும் அசாதாரண சூழ்நிலைகளியும் மீறி நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இது நமது உறுதியை, பொதுவான உறுதிப்பாட்டை, சகிப்புத் தன்மை, ஒற்றுமையில் வேற்றுமை என்பதைப் பாதுகாக்கும் அனைத்து மும்பை வாசிகளின் உறுதிப்பாடாகும்” என்று கூறியதோடு, தாத்ரி விவகாரம் குறித்து குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்த கருத்தையும் மேற்கோள் காட்டினார்.

அண்டை நாடான இருநாட்டு மக்களிடையே உள்ள தவறான கருத்துகளை மாற்றிக் கொள்ளவே, சரி செய்யவே இந்த புத்தகம் எழுதப்பட்டது என்று கசூரி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT