பாலியல் பலாத்கார வழக்கில் உபேர் டாக்ஸி ஓட்டுநர் ஷிவ்குமார் யாதவுக்கு விதிக்கப்படவிருக்கும் தண்டனை குறித்த விவாதம் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குர்காவ்னில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 25 வயது பெண்ணை உபேர் கால் டாக்ஸி ஓட்டுநர் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான புகாரில் அந்தக் காரின் ஓட்டுநர் ஷிவ்குமார் யாதவ் (32) கைதுசெய்யப்பட்டார். இவ்வழக்கு, டெல்லி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா, ஷிவ்குமார் யாதவ் குற்றவாளி என அறிவித்தார்.
இந்நிலையில் தண்டனை வழங்குவது தொடர்பான விவாதம் நேற்று நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், இந்தியா ஆப்பிரிக்கா மாநாடு வரும் 26-ம் தேதி நடை பெறவிருப்பதால் அதற்கான பாது காப்பு ஏற்பாடுகளில் காவல் துறை தயராகி வருகிறது. எனவே சிறையில் இருந்து அழைத்து வரப்படும் குற்ற வாளிக்கு பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் இருப்பதாக திஹார் சிறை நிர்வாகம் தெரிவித்தது.இதை யடுத்து வழக்கு விசாரணை வரும் நவம்பர் 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.