இந்தியா

ஆந்திர தலைநகர் அடிக்கல் நாட்டு விழா: 2 லட்சம் பேருக்கு விதவிதமான உணவு வகைகள் தயாரிப்பு

என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநில புதிய தலை நகரான அமராவதியின் அடிக் கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் சுமார் 2 லட்சம் பேருக்கு விதவிதமான உள்ளூர், வெளிநாட்டு உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஆந்திர மாநிலத்தில் புதிய தலைநகரமாக விஜயவாடா-குண்டூர் இடையே அமராவதி தேர்வு செய்யப்பட்டது.

சிங்கப்பூர் நிறுவனத்தின் நவீன தொழில்நுட்பம் மூலம் இந்த தலைநகரின் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் விஜயதசமியான 22-ம் தேதி வெகு விமரிசையாக நடத்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முக்கிய விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

அடிக்கல் நாட்டு விழாவில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 33 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கிய விவசாயிகளின் குடும்பத்தாருக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் சுமார் 24 ஆயிரம் குடும்பத்தினர் உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் விஐபிக்கள், வெளிநாட்டவர் என 700 பேர் வர உள்ளனர். இவர்களுக்காக 4 பிரிவுகளாக உணவுகள் தயாரிக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பங்கேற்கும் பொதுமக்கள் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தலா ரூ. 60 வீதம் சர்க்கரை பொங்கல், வெஜிடபிள் பிரி யாணி, 2 தண்ணீர் பாட்டில்கள் போன்றவை வழங்கப்பட உள் ளன. மேலும் ரூ.125 செலவில் ஒரு பிரிவும், ரூ. 750 செலவில் விஐபிக்களுக்கும் உணவுகள் தயார் செய்யப்படுகின்றன.

SCROLL FOR NEXT