கேரளத்தில் கரோனா தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்திருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''கேரளாவில் புதிதாகக் கரோனா தொற்றுக்கு 4,287 பேர் ஆளாகியுள்ளனர். இதில் தொடர்பு மூலம் 3,711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 471 பேருக்கு நோய்த்தொற்றின் ஆதாரம் தெரியவில்லை. தற்போது பாதிக்கப்பட்டவர்களில் 53 சுகாதார ஊழியர்களும் உள்ளனர். அதேநேரத்தில், இன்று 7,107 நோயாளிகள் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கேரளத்தில் தொற்றால் குணமானோர் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது.
புதிதாகத் தொற்று ஏற்பட்டவர்களின் மாவட்ட வாரியான புள்ளிவிவரங்கள்:
மலப்புரம் 853, திருவனந்தபுரம் 513, கோழிக்கோடு 497, திருச்சூர் 480, எர்ணாகுளம் 457, ஆலப்புழா 332, கொல்லம் 316, பாலக்காடு 276, கோட்டயம் 194, கண்ணூர் 174, காசர்கோடு 64, இடுக்கி 79, வயநாடு 28, பத்தனம்திட்டா 24. இன்று கண்டறியப்பட்டவர்களில் 52 பேர் வெளியில் இருந்து மாநிலத்திற்குப் பயணம் செய்துள்ளனர்.
மாவட்டங்களில் இருந்து பரவிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக:
மலப்புரம் 813, திருவனந்தபுரம் 359, கோழிக்கோடு 470, திருச்சூர் 469, எர்ணாகுளம் 337, ஆலப்புழா 312, கொல்லம் 310, பாலக்காடு 164, கோட்டயம் 186, கண்ணூர் 131, இடுக்கி 63, காசர்கோடு 59, பத்தனம்திட்டா 17.
மாவட்ட வாரியாகத் தொற்று பாதிப்பு கண்ட சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை:
திருவனந்தபுரம் 14, கண்ணூர் 9, எர்ணாகுளம் 8, கோழிக்கோடு 6, திருச்சூர் 5, கோட்டயம் மற்றும் மலப்புரம் தலா 3 ,கொல்லம், பத்தனம்திட்டா, பாலக்காடு, வயநாடு மற்றும் காசர்கோடு தலா ஒன்று.
இன்றைய பரிசோதனையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் மாவட்ட வாரியான எண்ணிக்கை:
திருவனந்தபுரம் 747, கொல்லம் 722, பத்தனம்திட்டா 180, ஆலப்புழா 497, கோட்டயம் 191, இடுக்கி 66, எர்ணாகுளம் 1,096, திருச்சூர் 723, பாலக்காடு 454, மலப்புரம் 1,002, கோசுரம் 1,002 மற்றும் காசர்கோடு 202.
இதுவரை, மாநிலத்தில் மொத்தம் 3,02,017 பேர் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர், அதே நேரத்தில் தற்போது 93,744 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட 2,83,473 பேரில், வீடு அல்லது நிறுவனத் தனிமைப்படுத்தலின் கீழ் 2,60,675 பேரும், மருத்துவமனைகளில் 22,798 பேரும் உள்ளனர். 2,974 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 35,141 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, மொத்தம் 43,63,557 மாதிரிகள் இதுவரை சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஐந்து பகுதிகள் விலக்கப்பட்டிருந்தாலும் 19 புதிய இடங்கள் இன்று ஹாட்ஸ்பாட்களாக வரையறுக்கப்பட்டன. கேரளாவில் இப்போது 682 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன''.
இவ்வாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.