இந்தியா

மாட்டிறைச்சி விவகாரம்: காஷ்மீர் சட்டப்பேரவையில் அமளி

பிடிஐ

ஜம்மு-காஷ்மீரில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து உயர் நீதிமன்ற ஜம்மு கிளை அண்மையில் உத்தரவிட்டது. இந்த விவகாரம் காஷ்மீர் சட்டப்பேரவையில் எதிரொலித்தது.

அவை கூடியதும் தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர்களும் காங்கிரஸ் உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மக்களின் மத சுதந்திரம் பறிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்லும் பக்தர் களுக்கு வரி விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.

இவை தவிர வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் ஆட்சேபம் தெரிவித்தன.

இதனால் அவையில் கடும் அளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப் பினர்கள் சபாநாயகர் கவீந்தர் குப்தா வின் இருக்கையை சூழ்ந்து கோஷ மிட்டனர். இதனால் அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT