காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி | கோப்புப் படம் 
இந்தியா

விஜயதசமி சொல்லும் செய்தி, ஒரு ஆட்சியாளரின் வாழ்க்கையில் ஆணவத்திற்கு,  வாக்குறுதிகளை மீறுவதற்கு இடமில்லை: சோனியா தசரா வாழ்த்து

பிடிஐ

விஜயதசமியின் மிகப்பெரிய செய்தி அது ஆட்சியில் மக்கள் மிக முக்கியமானவர்கள், ஒரு ஆட்சியாளரின் வாழ்க்கையில் ஆணவம், பொய்மை மற்றும் வாக்குறுதிகளை மீறுவதற்கு இடமில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது தசரா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தனது தசரா வாழ்த்துக்களில், உண்மை இறுதியில் வெற்றி பெறுகிறது என்று கூறினார்.

கடந்த வாரம் தொடங்கிய தசரா நிகழ்வுகள் நாளை விஜயதசமி பண்டிகையோடு நிறைவடைகின்றன. தசரா குறித்த தனது வாழ்த்துச் செய்தியில் சோனியா காந்தி கூறியுள்ளதாவது:

தசரா ஒன்பது நாள் வழிபாட்டிற்கு பிறகு, அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றியின் சின்னமாக, பொய்மைக்கு எதிரான உண்மையாக மற்றும் ஆணவத்தை வெற்றிகொள்ளும் விவேகத்துடன், எந்தவொரு சூழ்நிலையிலும் கடமைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு புதிய தீர்மானத்தையும் சபதத்தையும் கொண்டு வருகிறது.

ஆட்சியில் மக்களே முக்கியமானவர்கள், ஒரு ஆட்சியாளரின் வாழ்க்கையில் ஆணவம், பொய்மையோடு நடப்பதற்கும் வாக்குறுதிகளை மீறுவதற்கும் இடமில்லை. இதுதான் விஜய தசாமியின் மிகப்பெரிய செய்தி.

இந்த தசரா, அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை மட்டும் கொண்டுவரவில்லை, அவற்றிற்கும் மேலாக மக்களிடையே நல்லிணக்கத்தையும் கலாச்சார விழுமியங்களையும் வலுப்படுத்தும் ஒரு நிகழ்வு என்றே நான் நம்புகிறேன்.

பண்டிகைகளின் போது கரோனா வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், அனைத்து கோவிட் 19 வழிகாட்டுதல்களையும் பின்பற்றவும் வேண்டுமெனவும் மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தசரா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால், கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா உள்ளிட்ட பல மூத்த காங்கிரஸ் தலைவர்களும் தசரா முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT