பிஹார் தேர்தலில் தங்களின் லோக் ஜனசக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால் தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் சிறையிலடைக்கப்படுவார் என்று சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமார் மற்றும் அவரது அதிகாரிகள் சிறைக்குச் செல்ல வேண்டியதுதான்” என்றார்.
புக்சாரில் தும்ரவானில் அவர் பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசியதாவது:
பிஹாரில் மதுபானத் தடை தோல்வியடைந்து விட்டது. கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுகின்றன, கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது, நிதிஷ் குமாருகு இதன் மூலம் நல்ல ’வருவாய்’ லஞ்சமாகக் கிட்டுகிறது.
நிதிஷ் இல்லாத அரசை உருவாக்க விரும்புகிறோம். பிஹார் முதன்மை மாநிலமாக வர வேண்டுமெனில் லோக் ஜனசக்தி வேட்பாளருகக்கு வாக்களியுங்கள்.
லோக்ஜனசக்தி வேட்பாளர் நிற்காத இடத்தில் பாஜகவுக்கு வாக்களியுங்கள், வரும் அரசு நிதிஷ் இல்லாத அரசு, என்று பேசினார்.
நிதிஷை கடுமையாக எதிர்க்கும் இவர் மோடியை கடுமையாக ஆதரிக்கிறார், மோடியின் ஹனுமான் நானே என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறார் சிராக் பாஸ்வான்.
அக்.28ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவுகள் தொடங்குகின்றன.