இந்தியா

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக கூட்டணி 119; நிதிஷ்-லாலு அணி 116- கருத்துக் கணிப்பில் தகவல்

பிடிஐ

பிஹாரில் வரும் 12-ம் தேதி தொடங்கி நவம்பர் 5-ம் தேதி வரை 5 கட்டங்களாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நிதிஷ் குமார்- லாலு கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் லோக் ஜன சக்தி, ஆர்.எல்.எஸ்.பி., எச்.ஏ.எம். ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஐக்கிய ஜனதா தள (நிதிஷ்குமார்) கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் (லாலு பிரசாத்), காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.

இந்நிலையில் பிஹார் தேர்தல் நிலவரம் குறித்து இண்டியா டி.வி, சி வோட்டர் ஆகியவை இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளன.

பிஹார் சட்டப்பேரவையின் மொத்த பலம் 243. அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இண்டியா டி.வி, சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 119 இடங்களும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு 116 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010 சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக, ஐக்கிய தளம் கூட்டணி 206 இடங்களைக் கைப்பற்றியது.

ராஷ்டிரிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி கூட்டணி 25 இடங்களை மட்டுமே பிடித்தது.

SCROLL FOR NEXT