இந்தியா

வட கிழக்கு மாநிலங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு: இந்திய  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

அசாம் உட்பட வட கிழக்கு மாநிலங்களின் மாநிலங்களின் சில பகுதிகளில் நாளை தேதி பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

மேற்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் சில பகுதிகளில் அக்டோபர் 23-ஆம் தேதி அன்று பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT