இந்தியா

கமல்நாத்தின் சர்ச்சை பேச்சு ஏற்கத்தக்கது அல்ல: காங். முன்னாள் தலைவர் ராகுல் கருத்து

செய்திப்பிரிவு

மத்திய பிரதேச பெண் அமைச்சர் பற்றிய கமல்நாத்தின் கருத்து ஏற்கத்தக்கதல்ல என ராகுல் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் தேவரா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தேவராநகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் பேசிய அம்மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத், பாஜக வேட்பாளரும் அமைச்சருமான இமர்தி தேவியை தரக்குறைவாக விமர்சித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று கூறும்போது, “கமல்நாத் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் பயன்படுத்திய வார்த்தைகளை ஏற்க முடியாது.யாராக இருந்தாலும் இதுபோன்று பேசியவர்களை பாராட்டமாட்டேன். இது துரதிருஷ்டவசமானது” என்றார்.

இதுகுறித்து கமல்நாத் கூறும்போது, “அது ராகுலின் கருத்து. எத்தகைய சூழ்நிலையில் நான் அவ்வாறு தெரிவித்தேன் என்பது பற்றி ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டேன். யாரையும் அவமதிக்கும் நோக்கத்துடன் பேசாத நிலையில் நான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? யாராவது அவமதிக்கப்பட்டதாகக் கருதினால் அதற்கும் ஏற்கெனவே வருத்தம் தெரிவித்துவிட்டேன்” என்றார்.

SCROLL FOR NEXT