மகாராஷ்டிரத்தில் பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சிவசேனாவுக்கு அமைச்சர் பதவிகள் அளிக்கப்பட் டுள்ளன. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்று வரும் 31-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடையவுள்ளது.
அரசின் ஓராண்டு சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வது, ஓராண்டு நிறைவைக் கொண்டாடு வது உள்ளி்ட்டவை குறித்து ஆலோசிக்க, அமைச்சர்கள், பாஜக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், சிவசேனா கூட் டணியைத் தொடர்வதா, ஆட்சியில் அளித்துள்ள பங்கைத் திரும்பப் பெறவதா என்பன உள்ளிட்டவை விவாதிக்கப்பட உள்ளன. சிவசேனா வுக்கு ஆட்சியில் அளிக்கப்பட்டுள்ள பங்கைத் திரும்பப் பெறவே பல்வேறு பாஜகவினர் விரும்புகின்றனர்.
சிவசேனாவினால், பாஜக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் கருதுகின்றனர்.
“மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணியில் இருந்தபோதும், பிரதமர் மோடி, கட்சித் தலைவர் அமித் ஷா, பாஜகவை விமர்சிப் பதற்குக் கிடைக்கும் சிறிய வாய்ப் பைக் கூட சிவசேனா பயன்படுத்தத் தவறுவதில்லை. பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கசூரி விவகாரங்களில் மாநில அரசை சிவசேனா மிரட்டுகிறது” என பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.
“நமக்கு 123 எம்எல்ஏக்கள் உள்ளனர். 7 சுயேச்சைகளும் ஆதர வளிக்கின்றனர். பெரும்பான் மையை நிரூபிக்க கூடுதலாக 15 எம்எல்ஏக்கள் போதும். கூட்டணி முறிந்தால், சிவசேனாவிலிருந்து 17-18 பேர் பாஜகவில் இணைந்து விடுவர்” என பாஜகவில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், கல்வியமைச்சர் வினோத் தாவ்தே, சிவசேனா ஆட்சியிலிருந்து விலகாது என தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகள் கூட்டணி ஆட்சி தொடரும். கூட்டணி முறிவு குறித்த தகவல்கள் வதந்தி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மோடியை மீண்டும் விமர்சித்துள்ளது சிவ சேனா. பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது, தாத்ரி சம்பவம் உள்ளிட்ட விவகாரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்ட போது, “இவை விரும்பத்தகாத, துரதிருஷ்டவசமான சம்பவங்கள். ஆனால், இவற்றில் மத்திய அரசுக்கு என்ன தொடர்பு இருக்கிறது” என மோடி கேள்வியெழுப்பியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித் துள்ள சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், “கோத்ரா மற்றும் ஆமதாபாத் சம்பவங்கள் மூலமாகத்தான் உலகம் மோடியைப் பற்றி அறிந்து கொண்டது. அதே காரணங்களுக் காகத்தான் நாங்கள் மோடிக்கு மதிப்பளிக்கிறோம். குலாம் அலி, குர்ஷித் கசூரி சர்ச்சைகள் துர திருஷ்டவசமானவை என மோடி கருதுவாரேயானால், அவை நமக் கும் உண்மையாகவே துரதிருஷ்ட மானவைதான்” என கூறியுள்ளார்.
பாஜகவை சிவசேனா தொடர்ந்து உரசி வருகிறது. இம்மோதல் எங்குபோய் முடியும் என்பது மகாராஷ்டிர பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் இன்று தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.