இந்தியா

பிஹார் தேர்தலில் கருப்பு பண நடமாட்டம்: கட்டுப்படுத்த பார்வையாளர்கள் நியமனம்

செய்திப்பிரிவு

பிஹார் சட்டப்பேரவை தேர்தலின் போது கருப்பு பண நடமாட்டத்தை தடுப்பதற்காக 67 செலவு பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

பார்வையாளர்கள் தங்களது பணியை மாநிலம் முழுக்க மேற்கொண்டுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவில் பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான செலவுகள் கண்காணிப்பின் போது ரூ 35.26 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பிஹார் சட்டப்பேரவைக்கான 2020-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான சிறப்பு செலவு பார்வையாளர்களாக நிபுணத்துவமும், நேர்மையும் மிக்க இந்திய வருவாய் பணி முன்னாள் அதிகாரிகளான மது மகாஜன் மற்றும் பி ஆர் பாலகிருஷ்ணன் ஆகியோரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

உரிய ஆய்வுக்கு பிறகு, 91 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் செலவு தொடர்பாக அதிக கண்காணிப்பு தேவைப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 881 பறக்கும் படைகளும், 948 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பிஹார் மற்றும் அண்டை மாநிலங்களின் மூத்த அதிகாரிகளோடு செலவு கண்காணிப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு கூட்டங்களை நடத்தி உள்ளது.

SCROLL FOR NEXT