இந்தியா

கட்டணம் செலுத்தாததால் தண்டனை: மாணவன் தற்கொலை செல்போனில் மரண வாக்குமூலம்

செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தில், ஒரு மாணவன் பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் ஆசிரியர் அவனை வகுப்பறையில் அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்தார். இதனால் அவமானம் அடைந்த அந்த மாணவன், தனது செல்போனில் மரண வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்து, பின்னர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

கரீம் நகர் மாவட்டம், அப்பாபூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (15). இவர், ஜூலபல்லி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் இம்மாணவரை கடந்த 1-ம் தேதி வகுப்பில் இருந்து ஆசிரியர் வெளியேற்றி உள்ளார். இதனால் அவமானம் அைடந்த மாணவர் வீட்டுக்கு வந்து, தனது செல்போனில் ‘தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், ஆசிரியரின் செயலால் அவமானம் அடைந்ததாகவும் கூறி’ அந்த காட்சியை வீடியோ எடுத்தார்.

பின்னர், பெத்தபல்லி ரயில் நிலையம் அருகே சென்று, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT