இந்தியா

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார்

செய்திப்பிரிவு

நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதன் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அவ்வப்போது உரையாற்றி வருகிறார்.

தற்போது பருவமழை மற்றும் தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. ஊரடங்கு தளர்வு மற்றும் பண்டிகைகாலம் போன்றவற்றால் இந்தியாவில் கரோனாவின் 2-வது அலை பரவலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இந்தநிலையில் நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் ‘‘இன்று மாலை 6 மணிக்கு எனது சக குடிமக்களிடம் ஒரு செய்தியை பகிர உள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.

எதைப் பற்றி பேச இருக்கிறார் என்பதை அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. எனினும் பண்டிகைக்காலம் நெருங்குவதால் கரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய உரையில் பிரதமர் மோடி வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT