நாட்டில் உள்ள 32 விமான நிலையங்கள் பயணிகள் வருகை குறைவால் முடங்கிக் கிடப்பதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஷோக் கஜபதி ராஜு நேற்று தெரிவித்தார்.
திருப்பதியை அடுத்த ரேணி குண்டாவில் ரூ.190 கோடியில் கட்டப்பட்டுள்ள விமான நிலை யத்தை அஷோக் கஜபதி ராஜு நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
திருப்பதி ஸ்மார்ட் நகரமாக உருவாக உள்ளது. நாடு முழுவதி லும் மட்டுமின்றி பல வெளிநாடு களில் இருந்து தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகின்ற னர். பக்தர்களின் வசதிக்காக ரேணி குண்டாவில் அதிநவீன விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்துக்கு ‘பாலாஜி விமான நிலையம்’ என பெயர் சூட்டலாம் என்றும் மேலும் சிலர் முக்கிய தலைவர்களின் பெயரை சூட்டலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளனர். விரைவில் பெயர் அறிவிக்கப்படும்.
நம் நாட்டில் 500 உள்ளூர் மற்றும் 200 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இதில் 32 நிலையங்கள் பயணிகள் வருகை குறைவு காரணமாக முடங்கி உள்ளன. இதனால் மக்களின் வரிப் பணம் வீணாகி உள்ளது.
தமிழக எல்லையில், சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு வரு கிறது. விஜயவாடாவில் 700 ஏக்கரில் விமான நிலையம் புதுப் பிக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையமும் சர்வதேச தரத்தில் அமைய உள்ளது.
கடப்பா விமான நிலையத்துக்கு அன்னமைய்யா பெயர் சூட்டுமாறு சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வரு கிறது. ரேணி குண்டா பழைய விமான நிலையம், சரக்கு போக்கு வரத்துக்காக பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விமான நிலையத்தை திறந்து வைக்கிறார் மோடி
ஆந்திர மாநிலம் அமராவதியில் நாளை நடைபெற உள்ள புதிய தலைநகருக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். இதையடுத்து, திருப்பதியில் ரூ.190 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தையும் மோடி திறந்து வைக்கிறார்.
பிரதமரின் வருகையையொட்டி திருப்பதி நகரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாடில் கொண்டுவரப்பட்டுள்ளது.