இந்தியா

வியாபம் தேர்வு பார்வையாளர் மர்மமான முறையில் மரணம்: ஒடிசா ரயில் தண்டவாளத்தில் சடலம் கண்டெடுப்பு

ஐஏஎன்எஸ்

இந்திய வனப் பணி (ஐஎப்எஸ்) முன்னாள் அதிகாரியும் ஊழல் புகாரில் சிக்கியுள்ள வியாபம் அமைப்பின் தேர்வு பார்வையாளருமான விஜய் பஹதுர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “ஒடிசா மாநிலம் புரியிலிருந்து மத்தியப் பிரதேச மாநிலம் போபாலுக்கு புரி-ஜோத் பூர் விரைவு ரயிலில் விஜய் பஹதுர் தனது மனைவி நீதா சிங்குடன் பயணம் செய்துள்ளார். இந்நிலையில், ஒடிசா மாநிலம் ஜார் சுகுடா சந்திப்புக்குட்பட்ட பெல்ப ஹர் ரயில் நிலையத்துக்கு அருகே ரயில் தண்டவாளத்தில் அவரது சடலம் கடந்த வியாழக்கிழமை மீட்கப்பட்டது” என்றனர்

இதுகுறித்து ரயில்வே போலீ ஸின் கண்காணிப்பாளர் (ரூர்கேலா) கரம் சே கவார் தொலை பேசியில் கூறும்போது, “ஓடும் ரயிலி லிருந்து விஜய் பஹதுர் தவறி விழுந்திருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகுதான் அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும்” என்றார்.

ஜார்சுகுடாவிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள ராய்கர் ரயில் நிலையம் சென்ற பிறகு, தனது கணவரைக் காணவில்லை என நீதா சிங் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மத்திய பிரதேச தொழில்முறை தேர்வு வாரியம் (வியாபம்) கடந்த சில ஆண்டுகளாக நடத்திய தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர் கள், உயர் அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய வர்கள், சாட்சிகள் என 40-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மர்ம மான முறையில் மரணம் அடைந் தனர். இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதுவரை 80 முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகு பஹதுர் முதன்முறையாக மர்மமான முறையில் இறந்துள்ளார்.

SCROLL FOR NEXT