ஹைதராபாத்தில் கடந்த வாரம் கொட்டித்தீர்த்த மழையினால் பல குடியிருப்புகள், காலனிகள் நீரில் மூழ்கின, வெள்ளக்காடாகின.
சென்னையை 2015 வெள்ளம் புரட்டிப் போட்டது போல் ஹைதராபாத்தை மழை வெள்ளம் புரட்டிப் போட்டு விட்டது.
இயற்கை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. எனவே மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப நடந்து கொள்வது அதற்குரிய கட்டாயம் ஒன்றுமில்லை.
2000த்தில் இப்படிப்பட்ட வெள்ளம் புரட்டிப் போட்ட போது பல நிபுணர்களின் அறிக்கையும் ஆய்வறிக்கையும் மேற்கொண்ட பரிந்துரைகள் குப்பையில் போடப்பட்டன. இந்த பரிந்துரைகள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகளும் ஆமை வேகத்தில் நடந்தன. நீர்த்தேக்கங்கள், மழை நீர் வடிகால் அமைப்புகளில் தொடர் ஆக்கிரமிப்புகள் மட்டும் குறையவில்லை, படுவேகமாக அங்கு முன்னேறிக் கொண்டிருந்தது, ஒரு நடவடிக்கையும் இல்லை, வழக்குகளும் இல்லை தண்டனைகளும் இல்லை.
சமீபத்திய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் வெள்ள நீர் வடிகால் பகுதிகள் எப்படி வெள்ளக்காடாகின என்பதை சமூக ஆர்வலர்கள் விளக்கியுள்ளனர். சோஷலிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர், லப்னா சவத் கூறும்போது, “2014 முதல் 2020வரை ஏரிப்படுகைகளில் கன்னாப்பின்னாவென்று ஆக்கிரமிப்புகள் வேகமெடுத்தன. குரம் செருவு, சுன்னம் செருவு, பல்லே செருவு, அப்பா செருவு என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் ஆக்கிரமிப்புகள்தான்.
பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன, அரசு ஒன்றும் செய்யவில்லை. பல்வேறு மீறல்களை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். ஆனால் ஒரு பதிலும் இல்லை.
சிபிஐ (எம்) கட்சியின் நகரச் செயலாளர் ஸ்ரீநிவாஸ் கூறும்போது, ககன்பஹத்தில் உள்ள அப்பா செருவு பகுதியில் 14 ஏக்கர்கள் நிலம் ஆக்கிரமிப்பினல் 4 ஏக்கர்களாகக் குறைந்து விட்டது என்றார். இந்தப் பகுதியில் தொழிற்சாலை, வணிக வளாகங்கள் வந்து விட்டன, என்றார்.
ஹைதரபாத்-பெங்களூரு நெடுஞ்சாலை வெள்ளக்காடாகக் காரணம் ஆக்கிரமிப்புகளே. என்.ஜி.ஓ அமைப்பு ஒன்று 2014-ல் ’எங்கள் நகர ஏரிகளைக் காப்பாற்றுங்கள்’ என்று இயக்கமே கட்டமைத்தனர், ஆனால் 2018 - 2020-க்க்குள் அங்கு ஆக்கிரமிப்புகள் அதிவேகமாகப் பெருகின.
ஏரிகளையும் நதிகளையும் இணைக்கும் நீர்த்தேக்கங்கள் கடுமையாக ஆக்கிரமிக்கப்பட்டதே ஐதராபாத் வெள்ளக்காடானதற்குக் காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
-தி இந்து ஆங்கிலம்