பாக்சைட் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 3 பேரை மாவோயிஸ்ட்கள் நேற்று கடத்தினர். இதனால் விசாகப்பட்டினத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினம் மாவட்டம், ஏஜென்சி பகுதியில் உள்ள கொத்தவீதி மண்டல தெலுங்கு தேசம் தலைவர் எம். பாலய்யா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மஹேஷ், மூத்த நிர்வார் வி. பாலய்யா ஆகிய மூவரை மாவோயிஸ்ட்கள் நேற்று கடத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடிதம் எழுதியுள்ள மாவோயிஸ்ட் கள், அந்தப் பகுதியில் பாக்சைட் சுரங்கம் தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேரையும் கடத்தி யிருப்பதாக அதில் குறிப்பிட் டுள்ளனர்.
பாக்சைட் சுரங்கம் அமைப் பதற்கு தொடக்கம் முதலே மாவோயிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த 3 நிர்வாகிகளை கடத்தி இருப்ப தால், தற்போது அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கடத்தப்பட்டவர்களை விடுவிக்க வேண்டுமென அவர் களது குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.