ஐஎன்எஸ் சென்னை கப்பற்படை தளத்திலிருந்து பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
ஒலியை விட அதிக வேகத்தில் செல்லும் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் இருந்து இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அது அரபிக்கடலில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது.
எதிரிநாட்டுக் கப்பல்களை தொலைதூரத்திலிருந்து தாக்கும் திறன் கொண்ட முக்கிய ஆயுதமாக பிரமோஸ் ஏவுகணை கருதப்படுகிறது.இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளின் கூட்டு முயற்சியில் இந்த பிரமோஸ் ஏவுகணை வடிவமைத்து தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த வெற்றியை அடுத்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), பிரமோஸ் குழு மற்றும் இந்திய கடற்படைக்குத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத் தலைவர் டாக்டர் சதீஷ் ரெட்டி, டிஆர்டிஓ நிறுவனத்தின் ஊழியர்கள், விஞ்ஞானிகள், பிரமோஸ் மற்றும் இந்திய கப்பல் படைக்கு தமது வாழ்த்துக்களைக் கூறினார். இந்திய பாதுகாப்பு படைக்கு மேலும் வலுவூட்டும் வகையில் பிரமோஸ் ஏவுகணைகள் அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.