கரோனா வைரஸை எதிர்க்கும் போராட்டத்திலும், நம்மை காக்கும் போராட்டத்திலும் முன் களப் பணியாளர்கள் உயிர் விட்டதையும் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருப்பதையும் நாம் எண்ணி பார்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் கூறினார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று 75 லட்சத்தை நெருங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்திருந்த உயிரிழப்பு மீண்டும் அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 1,033 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 61 ஆயிரத்து 871 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 74 லட்சத்து 94 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.
இதில் நம்பிக்கை அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65 லட்சத்து ஆயிரத்து 24 ஆயிரத்து 595 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 88.03 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்து 83 ஆயிரத்து 311 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.
தொடர்ந்து 9-வது நாளாக கரோனா வைரஸால் சிகிச்சை பெற்றுவோர் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழும், முதல் முறையாக 7 லட்சத்துக்கும் கீழாகவும் குறைந்துள்ளது. இந்தநிலையில் நவராத்தி திருவிழா விருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஹர்ஷ வர்த்தன் கூறுகையில் ‘‘தற்போது நவராத்தி தொடங்கியுள்ளது. இதனை மக்கள் மனதில் கொள்ள வேண்டும். கரோனா வைரஸை விரட்டும் போராட்டம் நடந்து வருவதை அனைவரும் மனதில் எண்ணிப் பார்க்க வேண்டும். கரோனா வைரஸை விரட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான முன் களப் பணியாளர்களை ஞாபகத்தில் கொள்ளுங்கள். கரோனா வைரஸை எதிர்க்கும் போராட்டத்திலும், நம்மை காக்கும் போராட்டத்திலும் முன் களப் பணியாளர்கள் உயிர் விட்டதையும் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருப்பதையும் நாம் எண்ணி பார்க்க வேண்டும்.’’ எனக் கூறினார்.