இந்தியா

ராமஜென்ம பூமி  தீர்ப்பு சங் பரிவாருக்கு கடும் தைரியத்தை அளித்துள்ளது, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்: ஓவைஸி எச்சரிக்கை

ஏஎன்ஐ

கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரத்தில் மசூதிக்கு எதிராக மதுரா நீதிமன்றம் மனு ஒன்றை விசாரணைக்கு ஏற்ற விவகாரத்தில் மக்கள் சங் பரிவார் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கங்களின் செயல்பாடுகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித்தலைவர் அஸாசுதீன் ஓவைஸி எச்சரித்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ஓவைசி கூறும்போது, அயோத்தி தீர்ப்பின்னால் சங் பரிவாரத்தின் தைரியம் அதிகரித்துள்ளது, ஆகவே விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

“என்ன பயந்தோமோ அது உண்மையாகி விட்டது. பாபர் மசூதி விவகாரத்தில் கிடைத்த தீர்ப்பு சங் பரிவாரத்தை மேலும் தைரியமாக்கியுள்ளது.

நினைவில் கொள்ளுங்கள் நாம் விழித்துக் கொள்ளவில்லை எனில் சங் இன்னொரு வன்முறைப் பிரச்சாரத்தை தொடங்கும் இதில் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து விடும்.” என்று இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

மதுரா இத்கா குறித்து நீதிமன்றம் மனுவை ஏற்றுக் கொண்டதின் மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நீக்குப்போக்குகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

ஏற்கெனவே, ஓவைஸி, கிருஷ்ண ஜென்ம பூமி அமைப்புக்கும் ஷாஹி இத்கா அறக்கட்டளைக்கும் இடையே 1968-லேயே உடன்பாடு ஏற்பட்டு பிரச்சினை முடித்து வைக்கப்பட்டது. ஏன் இப்போது கிளற வேண்டும்? என்றார் ஓவைஸி.

கிருஷ்ணஜென்ம பூமி, மசூதி குறித்த மனு நவம்பர் 18ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT