இந்தியா

உ.பி. பராபங்கியில் வயலில் மர்மமாக இறந்து கிடந்த தலித் பெண்: பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை தகவல்

பிடிஐ

உ.பி.யில் ஹாத்ரஸ் மாவட்ட கிராமத்தில் தலித் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மருத்துவமனையில் பலியான விவகாரம் நாடு முழுதும் பெரும் சர்ச்சைகளைக் கிளப்ப, அந்த வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் தாக்கம் இன்னமும் தணியாத நிலையில் 18 வயது தலித் பெண் வயலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் நடந்துள்ளது.

இவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்டுள்ளார் என்று பிரேதப் பரிசோதனை அறிக்ககையை மேற்கோள் காட்டி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் கண்காணிப்பு போலீஸ் உயரதிகாரி ஆர்.எஸ். கவுதம், ‘பிரேதப் பரிசோதனை அறிக்கை, அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதை உறுதி செய்கிறது’ என்றார்.

சாத்ரிக் காவல் நிலையத்தில் முதல் தகவலறிக்கையில் பாலியல் வன்கொடுமை, பலாத்காரம் சேர்க்கப்படவுள்ளது. இது தொடர்பாக சிலரைக் கைது செய்து விசாரித்து வருகிறோம் என்றார் ஆர்.எஸ். கவுதம்

பலியான 18 வயது தலித் பெண்ணின் தந்தை புதன் மாலை மகளைக் காணவில்லை என்று புகார் அளித்தார். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் பெண்ணை பிணமாகவே கண்டு கதறி அழுதனர்.

கிராமத்துக்குச் சென்ற போலீஸ் குழு ஆதாரங்களை திரட்டியது பிறகு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது.

ஹாத்ரஸ் தலித் பெண் பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு டெல்லியில் செப்.29ம் தேதி மரணமடைந்தார், இவரை உயர்சாதியான தாக்கூர் சாதியைச் சேர்ந்த 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது.

இதில் ஹாத்ரஸ் தலித் பெண் உடலை போலீஸார் திருட்டுத் தனமாக அதிகாலையில் எரித்தது நாடு முழுதும் போராட்டங்களைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT