கோவா மாநிலத்துக்குள் செல்ல தனக்கு மும்பை உயர் நீதிமன்ற கோவா கிளை விதித்திருக்கும் தடையை நீக்கக் கோரி ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோவா மாநிலத்துக்குள் நுழையக் கூடாது எனக்கு தனக்கு மும்பை உயர் நீதிமன்ற கோவா கிளை விதித்த உத்தரவு அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என முதாலிக் குறிப்பிட்டிருந்த்தார்.
இந்நிலையில், பிரமோத் முத்தாலிக் மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "உங்கள் மனுவை இந்த அமர்வு தள்ளுபடி செய்கிறது. உங்களுக்கு கோவா மாநிலத்தில் என்ன வேலை. நீங்கள் அங்கு சென்று என்ன செய்யப்போகிறீர்கள்.
கலாச்சார காவல் என்ற பெயரில் உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பப்புகளுக்குச் சென்று அங்கிருக்கும் இளைஞர்கள், இளம் பெண்களை தாக்குவார்கள். கோவா மாநில மக்களே தங்கள் பிரச்சினைகளை கவனித்துக் கொள்வார்கள்.
நீங்கள் அங்கு செல்வதை அனுமதிக்க முடியது. எங்களை மன்னித்துவிடுங்கள். ஆறு மாதத்துக்கு பிறகு வாருங்கள். அப்போது வழக்கு குறித்து முடிவு செய்யலாம்" என்றனர்.