யானை மீது யோகா செய்த போது (முதல் படம்) தவறி கீழே விழுந்த யோகா குரு பாபா ராம்தேவ். 
இந்தியா

யானை மேல் அமர்ந்து யோகா செய்த ராம்தேவ் கீழே தவறி விழுந்தார்

செய்திப்பிரிவு

யோகா குரு என அழைக்கப்படும் பாபா ராம்தேவ், உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள தனது ஆசிரமத்துக்கு சில தினங்களுக்கு முன்பு சென்றார். அங்கிருந்தவர்களுக்கு ஆசனங்களை செய்து காட்டிய அவர், பின்னர் அங்கிருந்த ஒரு வளர்ப்பு யானையின் மீது அமர்ந்து சில யோகாசனங்களை செய்து காட்டினார்.

சில நொடிகள் அமைதியாக இருந்த யானை, ஒரு கட்டத்தில் வேகமாக தனது உடலை குலுக்கியது. இதில் நிலை தடுமாறிய ராம்தேவ், யானை மீதிருந்து கீழே விழுந்தார். எனினும், உடனடியாக எழுந்த அவர் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

SCROLL FOR NEXT