இந்தியா

முத்தலாக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.6,000 நிதி: உத்தர பிரதேச மாநில அரசு திட்டம்

ஆர்.ஷபிமுன்னா

உச்ச நீதிமன்றத்தால் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முத்தலாக் முறை தடை செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு, ’முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு (திருமண உரிமைகளின் பாதுகாப்பு) சட்டம் 2017’-ஐ அமலாக்கியது. இதன் விதிமுறைகள் கடுமையாக இருப்பினும், அச்சட்டத்தின்படி புகாரில் சிக்கியவர்களின் கைது மிகவும் குறைவாகவே உள்ளது.

சட்டம் கொண்டு வந்த பிறகும் முஸ்லிம்கள் இடையே முத்தலாக் அளிப்பது ஆங்காங்கே தொடர்கிறது. இதில் உத்தர பிரதேசத்தில் மட்டும் சுமார் 7,000 பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களிடம் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய
நாத் கடந்த வருடம் செப்டம்பர் 25-ல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து அப்பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.500உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இது அந்த பாதிக்கப்
பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. உத்தர பிரதேச மாநில மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில் முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.6,000 மாதந்தோறும் நிதியாக அளிக்கவும் திட்டமிடப்படுகிறது. அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு இதற்கான அறிவிப்பை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு வெளியிட உள்ளது.

உத்தர பிரதேசத்தின் 70 மாவட்டங்களிலும் முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்களின் கணக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT