இந்தியா

196 விழாக்கால சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அனுமதி

செய்திப்பிரிவு

196 விழாக்கால சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது.

விழாக்காலங்களில், பயணிகளின் கூட்டத்தை குறைக்கும் வகையில், 196 இணை ரயில்களை (392 ரயில்கள்) வரும் 20ம் தேதி முதல் நவம்பர் மாதம் 30ம் தேதி வரை இயக்க ரயில்வேத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விழாக்கால சிறப்பு ரயில்களின் கட்டணம், சிறப்பு ரயில்களுக்கான கட்டணத்துக்கு இணையாக இருக்கும்.

இந்த விழாக்கால சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணையை மண்டல ரயில்வே விரைவில் அறிவிக்கும்.

SCROLL FOR NEXT