பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் அளவிலான 7-வது சந்திப்பு: கூட்டறிக்கை வெளியீடு

செய்திப்பிரிவு

இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் அளவிலான 7வது சந்திப்பின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் சீனா ராணுவ உயர் அதிகாரிகளின் 7வது கூட்டம் லடாக் அருகேயுள்ள சுசூல் பகுதியில் அக்டோபர் 12-ம் தேதி நடந்தது. இந்தியா-சீனா எல்லை பகுதியின் மேற்கு பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை குறைப்பது குறித்து இரு தரப்பினரும், உண்மையான மற்றும் ஆக்கப்பூர்வமான வகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இருதரப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த கருத்து பரிமாற்றம் நேர்மறையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது. இருதரப்பினரின் நிலைப்பாட்டில் உள்ள புரிதலையும் அதிகரித்தது. ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, ராணுவ நடவடிக்கையை குறைக்கும் விதத்தில் பரஸ்பர தீர்வை, கூடிய விரைவில் ஏற்படுத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.

இரு நாட்டு தலைவர்களின் முக்கிய புரிதல்களை நேர்மையாக அமல்படுத்தவும், வேறுபாடுகள் மற்றும் பிரச்னையை எதிர்கொள்ளாமல், எல்லைப் பகுதியில் இருதரப்பும் கூட்டாக அமைதியை பராமரிக்க வேண்டும் என்றும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT