இந்தியா

தீபாவளி பண்டிகைக்கு  33 கோடி பசுஞ் சாண விளக்குகள்; தேசிய காமதேனு ஆயோக் நடவடிக்கை

செய்திப்பிரிவு

பஞ்சகவியப் பொருட்களைப் பயன்படுத்தி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் "காமதேனு தீபாவளி அபியான்" பிரச்சாரத்தைத் தேசிய காமதேனு ஆயோக் தொடங்கியது .

விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, விநாயகர் சிலைகளைத் தயாரிப்பதில் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காதப் பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவித்த கௌமய கணேஷா பிரச்சாரத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து, பஞ்சகவியப் பொருட்களைப் பயன்படுத்தித் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் "காமதேனு தீபாவளி அபியான்" பிரச்சாரத்தைத் தேசிய காமதேனு ஆயோக் தொடங்கியது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பசு சாணத்தால் தயாரிக்கப்பட்ட விளக்குகள், மெழுகுவர்த்திகள், ஊதுவர்த்திகள், சாம்பிராணிப் பொருட்கள், விநாயகர் மற்றும் லட்சுமியின் உருவச்சிலைகள் ஆகியவை ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தீபாவளிப் பண்டிகையின்போது, 11 கோடி குடும்பங்களில் பசு சாணத்தால் செய்யப்பட்ட 33 கோடி விளக்குகளை ஏற்ற தேசிய காமதேனு ஆயோக் திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT